கிரிக்கெட்

தொடர்ச்சியாக 5 அரைசதங்கள்... சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன்

ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 638 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆரஞ்சு நிற தொப்பியை மீண்டும் வசப்படுத்தினார்.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்தார். அத்துடன் அவர் தொடர்ச்சியாக 5-வது அரைசதத்தை அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து அதிக அரைசதங்கள் அடித்தவர்களான ஷேவாக், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் (இவர்களும் தொடர்ச்சியாக தலா 5 அரைசதம்) ஆகியோருடன் சாதனை பட்டியலில் சுதர்சன் இணைந்தார்.

நடப்பு தொட ரில் 14 ஆட்டங்களில் ஆடியுள்ள சாய் சுதர்சன் ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 638 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை மீண்டும் வசப்படுத்தினார். 2-வது இடத்தில் சுப்மன் கில் (6 அரைசதத்துடன் 616 ரன்) உள்ளார்.