கிரிக்கெட்

5-வது ஒருநாள் போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் மழையால் கைவி டப்பட்டது. மவுன்ட்மாங்கானுவில் நடந்த 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல். வேகப் பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜ் ஆகியோர் 3-வது ஒருநாள் போட்டி முடிந்ததுடன் வெலிங்டனுக்கு சென்று விட்ட னர். இதனால் இந்திய அணியை ஸ்ரேயாஸ் அய்யர் வழிநடத்துகிறார்.

கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங்கின் சதம் (125 ரன்), டிம் செய்பெர்ட்டின் அரைசதத்தின் (58 ரன்) உதவியுடன் 333 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி, இந்தியாவை 26.4 ஓவர்களில் 89 ரன்னில் சுருட்டி மெகா வெற்றியை பெற்றது. முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி சரிவில் இருந்து மீள முடி யாமல் சரண் அடைந்தது. அத்துடன் இந்த மைதானத்தில் 100 ரன்னுக்குள் அடங்கிய முதல் அணி என்ற மோசமான சாதனையை பெற்றது.

இஷான் கிஷன், அக்ஷர் பட்டேல், நமன் திர் தவிர வேறு யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ரோகித் சர்மா, விராட்கோலி, பொறுப்பு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 'டக்-அவுட்' ஆனார்கள். மூத்த வீரரான ரோகித் சர்மா 2-வது ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்தார். மற்ற இரு ஆட்டங்களிலும் ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் நெருக்கடியில் தவிக்கும் அவர் ரன்வேட்டைக்கு திரும்ப வேண்டிய கட் டாயத்தில் இருக்கிறார். பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவதுடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் இன்னும் கச்சிதமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச் சாளர் குர்னூர் பிரார் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ்க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரை வென்று விட்டு சென்றது. இதே போல் அவர்களது இடத்தில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு இதைவிட அரு மையான சந்தர்ப்பம் கிடைக்காது. அத்துடன் கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில் வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லாத குறையை போக்க தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சொந்த மண்ணில்

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். வில் யங், செய்பெர்ட், பின் ஆலென், கேப்டன் மிட்செல் சான்ட்னெர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டு களை கபளீகரம் செய்து இந்திய அணியை நிலைகுலையச் செய்த வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி மற்றும் கைல் ஜாமிசன் டெஸ்ட் அணியுடன் இணைவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி அணிக்கு திரும்புகிறார். ஆனாலும் நியூசிலாந்து வலுவாகவே காணப்படுகிறது.

அந்த அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது கிடையாது. அந்த பெருமையை தக்க வைக்க எல்லா வகையிலும் போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடைபெறும் மவுன்ட் மாங்கானு மைதானத்தில் நியூசிலாந்து அணி 13 ஆட்டங்களில் ஆடி 8-ல் வெற்றியும். 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றதும் அடங்கும். இந்திய அணி இங்கு 4 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றியையும், 2-ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

SCROLL FOR NEXT