கிரிக்கெட்

5வது டி20: இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கம்

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டுள்ளார்.

சவுத்தாம்டன்,

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களிலும் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சவுத்தம்டன் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து முதலில் செய்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

கடந்த 3 போட்டிகளில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 14, 13, 15 ரன்களில் முறையே ஆட்டமிழந்தார்.இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.