ஹாமில்டன்,
5-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இந்தியா 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளனர்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் கேப்டன் ஐயர் மற்றும் கிஷான் அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி உள்ளது.