காலே,
இந்தியா தனது 600-வது டெஸ்ட் போட்டியை ஆகஸ்ட் 15-ம் தேதி (நாளை) , இலங்கைக்கு எதிராக காலே மைதானத்தில் விளையாடுகிறது.இந்தப் போட்டி இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தன்று நடைபெறுவதால், இந்திய அணியின் கேப்டன் கில்லுக்கு இது தனிச்சிறப்பு வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது.
1932-ல் தொடங்கிய இந்தியாவின் டெஸ்ட் பயணம், தற்போது 600-வது போட்டியை எட்டியுள்ளது.
இது தொடர்பாக கில் கூறியதாவது,
இந்தியாவின் 600-வது டெஸ்ட் போட்டியில் என் நாட்டை வழிநடத்துவது மிகப்பெரிய கவுரவம். அதுவும் சுதந்திர தினத்தன்று இந்தப் பொறுப்பை ஏற்றிருப்பது இன்னும் பெரிய பெருமை. என கேப்டன் குறிப்பிட்டுள்ளார்.