சென்னை,
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட், சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை எட்டியபோது சச்சின் தெண்டுல்கரின் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய ரூட், 521 இன்னிங்ஸ்களில் 23,000 ரன்களை கடந்தார்.
சச்சின் தெண்டுல்கர் 23,000 சர்வதேச ரன்களை எட்ட 522 இன்னிங்ஸ்கள் எடுத்திருந்த நிலையில், ரூட் ஒரு இன்னிங்ஸ் முன்னதாகவே அந்த சாதனையை முறியடித்தார். இருப்பினும், இந்த மைல்கல்லை எட்டியதில் விராட் கோலி 490 இன்னிங்ஸ்களில் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
இதன்மூலம் 23,000 சர்வதேச ரன்களை வேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ஜோ ரூட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.