சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் புகழ்ந்துள்ளார். 20 ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.