கிரிக்கெட்

சீர்காழி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அபிஷேக் சர்மா சாமி தரிசனம்

இந்த போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா இடம் பெற்றுள்ளார்.

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில்,தமிழகத்தின் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் புதன் ஸ்தலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.