கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை - நாளைய ஆட்டத்தில் அபிஷேக் இல்லையா? - சஞ்சு சாம்சன் ஓப்பனராக வாய்ப்பு

அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நமீபியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள லீக் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அபிஷேக் சர்மா அணியில் முக்கிய தொடக்க வீரராக இருப்பதால், இது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

இந்நிலையில், அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.