கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்... சூர்யகுமார், இஷான் கிஷன் வரிசையில் அபிஷேக் சர்மா

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.

கிறைஸ்ட்சர்ச்,

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.

மூன்றாவது இந்தியர்

ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் 1,000 ரன்களைக் குவித்த இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர் 2022-ஆம் ஆண்டில் 1,164 ரன்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 2026-ஆம் ஆண்டில் இதுவரை 1,159 ரன்களைக் குவித்துள்ளார். தற்போது அபிஷேக் சர்மாவும் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.

ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்

சூர்யகுமார் யாதவ் – 1,164 ரன்கள் (2022)

இஷான் கிஷன் – 1,159 ரன்கள் (2026)

அபிஷேக் சர்மா – 1,012 ரன்களைக் கடந்தார் (2026)

அதிரடியான தொடக்க ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு வலுசேர்த்து வரும் அபிஷேக் சர்மா, இந்த ஆண்டில் மேலும் பல ரன்களைக் குவித்து சாதனைப் பட்டியலில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT