கிரிக்கெட்

திலக் வர்மாவுக்கு பேட் பரிசளித்தார் நடிகர் ராம்சரண்

திலக் வர்மாவுக்கு ராம் சரண், கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்தார்.

ஐதராபாத்,

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐதராபாத் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து பெத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ராம் சரணை திலக் வர்மா சந்தித்தார். அப்போது திலக் வர்மாவுக்கு ராம் சரண், கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்தார்.

இயக்குநர் புச்சி பாபு இயக்கியுள்ள 'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT