கிரிக்கெட்

மதுபானத்திற்கு அடிமை, சிகிச்சை... இந்த பிரபல கிரிக்கெட் வீரரா இப்படி?

என்னுடைய சிறந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியாக இருந்தனர் என்றார்.

மும்பை

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் மதுபானத்திற்கு அடிமையாகி, சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல் (வயது 36). இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், சமீபத்தில் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடி, பல வெற்றிகளை பெற உதவிய சாஹல், தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளார்.

விருந்து நிகழ்ச்சி

இதுபற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ராவிடம் அளித்த பேட்டியொன்றில், கடந்த ஆண்டு கவுன்டி கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னர், வாழ்க்கையில் மதுபானம் எல்லை கடந்து சென்று விட்டது. அதற்கு அடிமையாகி, ஏறக்குறைய 26 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றேன்.

அதன்பின்னர், அதில் இருந்து விடுபட்டு விட்டேன். அதனை கையாள்வது எப்படி? என்றும் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறுகிறார். 2011-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் நுழைந்தபோது, அவருக்கு மதுபான தொடர்பு ஏற்பட்டது.

பெரிய வித்தியாசம்

இதுபற்றி அவர் கூறும்போது, இளம் வயதில், நிறைய விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். விவாகரத்திற்கு பின்னர் அது படுமோசமடைந்தது. அதில் இருந்து விடுபட்ட பின்னர் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. என் பக்குவம் அதிகரித்தது. உணர்ச்சிகள் சமநிலைக்கு வந்து விட்டன. இதற்கு என்னுடைய சிறந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியாக இருந்தனர் என்றார்.

SCROLL FOR NEXT