கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் 217 ரன்களுக்கு ஆல் அவுட்

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

சார்ஜா,

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இத்தொடரில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஜிம்பாப்வே 339 ரன்கள்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் சார்ஜாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 339 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரண்டன் டெய்லர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்தார்.

ஆப்கானிஸ்தான் 217 ரன்கள்

இந்நிலையில், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அப்சர் சசாய் அதிகபட்சமாக 63 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் வின்சண்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 122 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT