அபுதாபி,
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்டில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஒரேஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 106 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில் இன்று 4ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட்டில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 347 ரன்கள் தேவை. அதேவேளை, வங்காளதேசம் வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இதனால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.