கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாய்,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் முத்தரப்புத் தொடரின் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சிதிகுல்லா அடல் 110 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் சத்ரான் 96 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

295 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதமடித்த சிதிகுல்லா அடல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT