கிரிக்கெட்

2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சார்ஜா,

2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

2வது டி20

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் 221 ரன்கள்

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அஸ்மதுல்லா உமர்சாய் 50 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் பிரட் இவன்ஸ், மாட்டிகிமு அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் வெற்றி

இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் ஜிம்பாப்வேயை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. அதேவேளை, கடைசி வரை போராடிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா 56 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்த அணியின் அப்துல்லா அகமதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT