துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக 6-வது இடத்துக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆண்கள் ஒருநாள் அணிகள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வெளியிட்டது. இதில் ஆப்கானிஸ்தான் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்பு 7-வது இடத்தில் இருந்த அந்த அணி, தற்போது இலங்கையை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.
சமீபத்தில் ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் இலங்கை அணி தோல்விகளை சந்தித்ததால் அதன் தரவரிசை புள்ளிகள் குறைந்தன. இதனால் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தற்போதைய பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் 6-வது இடத்தையும், இலங்கை 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.