கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இன்று மோதல்

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.

அபுதாபி,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன.

முத்தரப்பு கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இத்தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிப்போட்டி

அதன்படி லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.

SCROLL FOR NEXT