கிரிக்கெட்

பின் ஆலன், ரகுவன்ஷி அசத்தல்: கொல்கத்தா அணி 247 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிக ளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பிய னான குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக பின் ஆலன் குஜராத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 35 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடினார். அவர் 82 ரன்கள் எடுத்தார். கிரீன் 52 ரன்கள் எடுத்தார்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.