கிரிக்கெட்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்: பெங்களூரு கேப்டன் கூறியது என்ன.?

பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தர்மசாலா,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது அத்துடன், நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறியதாவது;

”பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி, நாங்கள் போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். நாங்கள் அழுத்தத்தில் இல்லை. ஆடுகளத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் அணியின் தாரக மந்திரம் மிகவும் எளிமையானது. இன்றைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் அது. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம், அவ்வளவுதான்.”

இவ்வாறு அவர் கூறினார்.