லக்னோ,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
லக்னோ அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றுள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் லக்னோ அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், லக்னோ அணி வீரர் அர்ஜுன் தெண்டுல்கர் பயிற்சியில் யார்க்கர் பந்துகளை தொடர்ச்சியாக வீசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.