கிரிக்கெட்

சர்வதேச டி20 போட்டிகளில் மிரட்டும் அர்ஷ்தீப் சிங் - புவனேஸ்வர் குமார் சாதனையை தகர்த்து அசத்தல்

2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

கிறைஸ்ட்சர்ச்,

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

முன்னிலை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

இப்போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

38 விக்கெட்

இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் தான் வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் டிம் செய்பெர்ட்டை ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து, 18-வது ஓவரில் அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், 2026-ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் தனது விக்கெட் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தினார்.

புவனேஸ்வர் குமார்

இதற்கு முன்பு, 2022-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக இருந்தார். தற்போது 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அர்ஷ்தீப் சிங், அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

SCROLL FOR NEXT