சென்னை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கே றிய குரூப் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 256 ரன் கள் குவித்தது. பின்னர் 257 இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 184 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஜஸ்பிரித் பும்ராவின் முந்தைய சாதனையை (33) விக்கெட் முறியடித்துள்ளார்.அர்ஷ்தீப் சிங் தற்போது 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பும்ரா 33 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.