கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங் காயம்: கடைசி போட்டியில் விளையாடுவாரா ?

ஷமார் ஜோசப் வீசிய வேகமான பவுன்சரால் அர்ஷ்தீப் காயமடைந்தார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷ்தீப் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் காயமடைந்தார். அவரது உடல்நிலை குறித்து இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் வீசிய வேகமான பவுன்சரால் அர்ஷ்தீப் காயமடைந்தார்.

வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து பேட்டிங் செய்ய முயன்றார். ஆனால், அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.இதனால் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் காயம் காரணமாக ஆட்டத்தைத் தொடராமல் வெளியேறினார்.

அர்ஷ்தீப்பின் உடல்நிலை குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், அவர் ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், அவரது காயத்தின் தீவிரம் குறித்து விரிவான மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தற்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் 2–2 எனச் சமநிலையில் உள்ளன.தொடரின் கடைசி மற்றும் தீர்மானப் போட்டிப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்பது அவரது உடல்நிலை மற்றும் அணியின் மருத்துவக் குழுவின் மதிப்பீட்டைப் பொறுத்தே அமையும்.

SCROLL FOR NEXT