கிரிக்கெட்

நிர்வாகப் பிரச்சினையால் முடங்கிய அருணாசலப் பிரதேச கிரிக்கெட்: முதல் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்

ரஞ்சி கோப்பை மற்றும் சி.கே. நாயுடு கோப்பை தொடரின் முதல் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அகமதாபாத்,

அருணாசலப் பிரதேச கிரிக்கெட் அணியில் நிலவி வரும் நிர்வாகச் சிக்கல் காரணமாக, அந்த அணி ரஞ்சி கோப்பை மற்றும் சி.கே. நாயுடு கோப்பை தொடரின் முதல் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை பிளேட் பிரிவில் நாகாலாந்துக்கு எதிராக அக்டோபர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருந்த முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதுடன், அக்டோபர் 12ஆம் தேதி மேகாலயாவுக்கு எதிராக நடைபெறவிருந்த சி.கே. நாயுடு கோப்பை போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றுள்ளதே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகும்.

இந்த வழக்கை கவுகாத்தி உயர் நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. நிர்வாகச் சிக்கல் காரணமாக அணியைத் தேர்வு செய்ய முடியாததுடன், வழக்கமாக அகமதாபாத்தில் நடத்தப்படும் பயிற்சி முகாமும் நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் போட்டிக்குத் தயாராகும் வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேச அணியின் அடுத்த ரஞ்சி கோப்பைப் போட்டி அக்டோபர் 18ஆம் தேதி சிக்கிமுக்கு எதிராக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சி.கே. நாயுடு கோப்பையில் அக்டோபர் 19ஆம் தேதி நாகாலாந்துக்கு எதிராக அடுத்த போட்டி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT