கிரிக்கெட்

ஆசிய கோப்பை: 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

இன்றைய இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணியுடன் மோதும்.

தோகா,

பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரண்டாவது அரையிறுதி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் ஏ அணியும், வங்காளதேசம் ஏ அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணி

இதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா ஏ அணி, இலங்கை ஏ அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி நிர்ணயித்த இலக்கை எளிதாக எட்டிய இலங்கை ஏ அணி, 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இந்தியா ஏ அணி தொடரிலிருந்து வெளியேறியது. இன்றைய இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணியுடன் மோதும்.

SCROLL FOR NEXT