கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: பாகிஸ்தான் ‘ஏ’-இலங்கை ‘ஏ’ இன்று மோதல்

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.

இறுதிப்போட்டி

அப்துல் சமத் தலைமையிலான பாகிஸ்தான் 'ஏ' அணிலீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, நேபாளம் அணிகளை தோற்கடித்தது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பவன் ரத்னாயகே தலைமையிலான இலங்கை 'ஏ' அணி லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்காளதேசத்தை தொடர்ச்சியாக வென்றது. அரைஇறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப் போட்டியை எட்டியது.

தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் வந்துள்ள இவ்விரு அணிகளும் கோப்பையை வசப்படுத்த வரிந்து கட் டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SCROLL FOR NEXT