வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’-நேபாளம் அணிகள் மோதுகின்றன.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது.போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்காள தேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரி வில் இந்தியா 'ஏ', நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக் கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கி ழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' -நேபாளம் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன. திலக் வர்மா தலைமையிலான இந்திய 'ஏ' அணியில் பேட் டிங்கில் அபிஷேக் வர்மா, ரிங்கு சிங், வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங், சூர்யான்ஷ் ஷெட்கே, பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ், ஹர்ஷித் ராணா, தனுஷ் கோடியன், விப்ராஜ் நிகாம் உள்ளிட்ட சிறந்த வீரர் கள் அங்கம் வகிக்கின்றனர். 15 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
சந்தீப் லாமிச்சானே தலைமையிலான நேபாள அணியில் குஷால் புர்டெல், இஷான் பாண்டே, லலித் ராஜ்பன்ஷி, சந்தீப் ஜோரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த அணி சுழற்பந்து வீச்சில் பலமானதாகும். இருப்பினும் வலுவான இந்திய அணி யின் சவாலை சமாளிப்பது கடினமாகும்.
முன்னதாக நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ' அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் (காலை 11.30 மணி) மோதுகிறது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
தொடக்க நாளில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 220 ரன் இலக்கை வங்காளதேச அணி 41 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் இலங்கை 'ஏ' அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியை துவம்சம் செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தானை 139 ரன்னில் (35.3 ஓவ ரில்) மடக்கிய இலங்கை அணி 21.4 ஓவர்களில் இலக்கை விரட்டிப்பிடித்தது.