கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் இன்று பலப்பரீட்சை

திலக் வர்மா தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ரிங்கு சிங் என திறமையும், அனுபவமும் கொண்ட வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா 'ஏ'-பாகிஸ் தான் 'ஏ' அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.

போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் 4-வது நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.

இந்திய 'ஏ' அணி தனது தொடக்க ஆட்டத்தில் 306 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது. முதலில் ஆடி 332 ரன்கள் குவித்த இந்திய அணி, நேபாளத்தை 11.3 ஓவர் களில் 26 ரன்னில் சுருட்டியது. பேட்டிங்கில் கேப்டன் திலக் வர்மா. குமார் குஷக்ரா சதம் அடித்தனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரின்ஸ் யாதவ், ஹர்ஷித் ராணா கலக்கினர்.

இந்திய அணி எப்படி?

திலக் வர்மா தலைமையிலான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ரிங்கு சிங். பிரப்சிம்ரன் சிங், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்கே, பிரின்ஸ் யாதவ், ஹர்ஷித் ராணா, விப்ராஜ் நிகாம், ஷபாஸ் அகமது என திறமையும், அனுபவமும் கொண்ட வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர பலமாக விளங்குகிறது.

பாகிஸ்தான் 'ஏ' அணி தனது முதல் ஆட்டத்தில் 61 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீர கத்தை எளிதில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்து 245 ரன்னில் ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான் அணி, அடுத்து அடிய ஐக்கிய அமீரகத்தை 40.5 ஓவர்களில் 184 ரன்னில் அடக்கியது.

அப்துல் சமத் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஷாமில் ஹூசைன், மாஸ் சதாகத் சுப்யான் மொகிம், அலி ராசா, முகமது இம்ரான், பர்ஹான் யூசுப் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாலை 3.30 மணிக்கு...

தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த இரு அணிகளும் கடுமை யாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளி பரப்பு செய்கிறது.

முன்னதாக இதேபிரிவில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நேபாளம் அணிகள் சந்திக்கின்றன. இவ்விரு அணிகளும் தங்கள் முதலாவது ஆட்டத்தில் தோல்வி கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT