தோகா,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.
இத்தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இத்தொடரில் 4-வது நாளான இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, பாகிஸ்தான் 'ஏ' அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்துய அணி முதலில் பந்துவீச உள்ளது.