கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: சதம் விளாசிய இலங்கை அணி வீரர் ஜெயவர்தனா

அவர் ஷாபாஸ் அகமது பந்து வீச்சில் தனுஷ் கோடியானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தோகா

ஆசிய கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி போட்டியில், இலங்கை அணி வீரர் ஜெயவர்தனா சதம் விளாசினார்.

கத்தார் தலைநகர் தோகாவில், வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா 'ஏ'- இலங்கை "ஏ' அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இதில், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 317 ரன்கள் எடுத்துள்ளது.

அரை சதம்

இதனால், இலங்கை அணி வெற்றி பெற 318 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சினத் ஜெயவர்தனா, லசித் குரூஸ்புல்லே ஆகியோர் விளையாடினர். அவர்களில், 15.4-வது ஓவரில் குரூஸ்புல்லே 50 (43 பந்துகள், 7 பவுண்டரிகள், 1 சிக்சர்) அரை சதம் விளாசினார்.

ஜெயவர்தனா 105 (70 பந்துகள், 10 பவுண்டரிகள், 6 சிக்சர்) சதம் விளாசினார். அவர் ஷாபாஸ் அகமது பந்து வீச்சில் தனுஷ் கோடியானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 23 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு இலங்கை 177 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT