தோகா
ஆசிய கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி போட்டியின், தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 130 ரன்கள் குவித்துள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில், வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா 'ஏ'- இலங்கை "ஏ' அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்திய 'ஏ' அணி தனது முதலாவது லீக்கில் 306 ரன் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது.
2-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றி கொண்டது. இந்த நிலையில், இன்று தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல், அதிரடியாக விளையாடினார். அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்திருந்தபோது (40 ரன்கள்), லியானகே பந்து வீச்சில் குரூஸ்புல்லேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், கேப்டன் திலக் வர்மா ஜோடி போட்டார். இதில், அபிஷேக் சர்மா 9 பவுண்டரிகளுடன் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் குவித்துள்ளது. திலக் வர்மா (23), அபிஷேக் சர்மா (56) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா 78 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்திருந்தபோது, சமரகூன் பந்து வீச்சில் லியானகேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 22 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 159 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மாவுடன், குமார் குஷாக்ரா கைகோர்த்து விளையாடி வருகிறார்.