கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

அதிரடி ஆட்டக்காரர் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தோகா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ'. வங்காளதேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா 'ஏ' நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் 'ஏ', ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய ஏ அணி

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்காளதேசம் 'ஏ'-ஹாங்காங் (காலை 11.30 மணி), ஆப்கானிஸ் தான் 'ஏ-இலங்கை 'ஏ' (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டியில் திலக் வர்மா தலைமையில் இந்திய ஏ அணி களம் இறங்குகிறது. ரிங்கு சிங், அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷக்ரா, சூர்யான்ஷ் ஷெட்கே. ஷபாஸ் அகமது, விப்ராஜ் நிகாம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான். ஆயுஷ் பதோனி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 15 வயது அதிரடி ஆட்டக்காரர் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை நாளையும், 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ் தானை வருகிற 22-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வருகிற 24-ந் தேதியும் எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT