கிரிக்கெட்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி 183 ரன்கள் குவிப்பு

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

துபாய்,

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர்) துபாயில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.

இதைத்தொடர்ந்து நடந்த முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பதம் பார்த்து தொடர்ந்து 10-வது முறையாகவும், இரண்டாவது அரைஇறு தியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது தடவையா கவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியனான இலங் கையை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை இந்திய வீராங்கனைகள் துவம்சம் செய்தனர். ஸ்மிருதி மந்தனா . ஷாபாலி வர்மா சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இருவரும் அரைசதம் அடித்தனர். ஷாபாலி வர்மா 68 ரன்களும் , ஸ்மிருதி மந்தனா 59 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

SCROLL FOR NEXT