கிரிக்கெட்

ஆசிய கோப்பை: இந்திய வீராங்கனை விலகல்

தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடியபோது ஜெமிமாவுக்கு காயம் ஏற்பட்டது.

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக வரும் ஆசிய கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.ஆகஸ்ட் 3-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடியபோது ஜெமிமாவுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜெமிமாவுக்குப் பதிலாக பிரதிகா ராவல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மாற்று வீராங்கனை குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.