டோக்கியோ,
45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வரு கிறது. போட்டியின் 12-வது நாளான நேற்று இந் தியாவுக்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. வில்வித்தையில் 3, துப்பாக்கி சுடுதலில் 1 என ஒரே நாளில் இந்தியா 4 தங்கப்பதக்கத்தை வென்று பிரமிக்க வைத்தது.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று (காலை 10.30 மணி) நடைபெறும் அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் ரத்தானால் தரவரிசை முன்னிலை அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.