நகோயா,
ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட்டில் 2வக்து அரையிறுதியில் இந்தியா - வங்காளதேசம் இன்று மோதுகின்றன.
20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கும் முன்பே கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதனிடையே, ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 அணிகள் மோதின. இதில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இந்நிலையில், ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
முன்னதாக இதே மைதானத்தில் நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மோத உள்ளன. ஆனால், மழையால் இப்போட்டி தாமதமாகி வருகிறது.