டோக்கியோ,
ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் 2வது அரையிறுதியில் இந்தியா - வங்காளதேசம் மோதி வருகின்றன.
20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே, ஆசிய விளையாட்டில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் இன்று 2வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன.
ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஷிபாலி வர்மா 49 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்கி விளையாட உள்ளது.