டோக்கியோ,
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் அபிஷேக் சர்மா , சஞ்சு சாம்சன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 37 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து இஷான் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். நிலைத்து விளையாடிய அவர் அரைசதம் அடித்து 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.