கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு அரைஇறுதி: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷகிப்ஸாதா பர்ஹான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டோக்கியோ,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷகிப்ஸாதா பர்ஹான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மழையால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT