புதுடெல்லி,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங் கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் உத்தேச பட்டியலை இந்திய கிரிக் கெட் வாரியம், இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சமர்ப்பித்து இருக்கிறது. 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை. 15 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். அந்த சமயத்தில் உள்ளூரில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் (செப்.27-அக். 17) விளையாடுவதால் முன்னணி வீரர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் ஜெய்ஸ் வால், அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம் சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, அனு குல் ராய், ஆயுஷ் பதோனி, ஹர்ஷ் துபே, துருவ் ஜூரெல், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, ஷிவம் துபே, விப் ராஜ் நிகாம், ஹர்ஷித் ராணா, யாஷ் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.