சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங் கேற்றுள்ளது. இதில் தர்மசாலா, லக்னோவில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
கடந்த போட்டியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் களம் இறக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில் 3-வது வீரராக களம் இறங்கினார். வழக்கமாகி 4வது அல்லது 5வது களமிறங்கும் கே.எல். ராகுல் 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சேப்பாக்கம் போட்டியிலும் 6-வது இடத்தில்தான் கே.எல். ராகுல் களம் இறங்குவார் என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான டெ டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.