சிட்னி,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாதபோதிலும், மிடில்-ஆர்டர் பேட்டரான மார்னஸ் லபுஷேனை தேர்வாளர்கள் அணியில் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.
அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
மேலும், கூப்பர் கானலி, மேத்யூ குஹ்னெமேன் மற்றும் மைக்கேல் நெசர் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, கேமரன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமேன், மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், போ வெப்ஸ்டர்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய ‘சாண்ட்பேப்பர்கேட்’ பந்தை சேதப்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது.
அந்தப் பயணத்தில் இடம்பெற்ற வீரர்களில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ரென்ஷா ஆகிய 5 பேர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன.
முதல் ஒருநாள்: செப்டம்பர் 24 - கிங்ஸ்மீட், டர்பன்
2-வது ஒருநாள்: செப்டம்பர் 27 - வாண்டரர்ஸ், ஜோஹன்னஸ்பர்க்
3-வது ஒருநாள்: செப்டம்பர் 30 - ஜேபி மார்க்ஸ் ஓவல், போச்செஃப்ஸ்ட்ரூம்
மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, ஜோயல் டேவிஸ், நாதன் எல்லிஸ், கேமரன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
பயிற்சி ஆட்டம்: அக்டோபர் 3-4 - ஜேபி மார்க்ஸ் ஓவல், போச்செஃப்ஸ்ட்ரூம்
முதல் டெஸ்ட்: அக்டோபர் 9-13 - கிங்ஸ்மீட், டர்பன்
2-வது டெஸ்ட்: அக்டோபர் 18-22 - செயின்ட் ஜார்ஜ் பார்க், கெபெர்ஹா
3-வது டெஸ்ட்: அக்டோபர் 27-31 - நியூலேண்ட்ஸ், கேப் டவுன்