கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஹராரேவில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 13.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி ரன் எதுவும் எடுக்காமலும், கூப்பர் கான்லி 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT