கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

முதல் டெஸ்ட்

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டர்பன் நகரில் உள்ள மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கி விளையாடி வரும் ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் , மார்னஸ் லபுஷேன் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT