ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சமீபத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் டி20 தொடரில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டி20 தொடரையும் கைப்பற்றும் நம்பிக்கையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.
காயம் காரணமாக மஹ்லி பியர்ட்மேன், சேவியர் பார்ட்லெட் ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாதன் எல்லிஸும் காயம் காரணமாக விலகியுள்ளார். விக்கெட் கீப்பர் சாம் ஹார்ப்பர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாக உள்ளார்
ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் தலைமையிலான அணியில் பில் சால்ட், டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.