கிரிக்கெட்

'நம்பர் ஒன்' இடத்தை இழந்த ஆஸ்திரேலியா

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை ஆகிய இரண்டிலும் சரிவை சந்தித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல் மற்றும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை ஆகிய இரண்டிலும் சரிவை சந்தித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி (69.23 சதவீத புள்ளி) 3-வது இடத்துக்கு சறுக்கியது. நியூ சிலாந்து அணி (72.22 சதவீத புள்ளி) 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு ஏற்றம் கண்டது. தென்ஆப்பிரிக்க அணி (71.43 சத வீத புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி (51.52 சதவீத புள்ளி) 4-வது இடத்தில் உள்ளது.

இதேபோல் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி (122 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற தென்ஆப்பிரிக்க அணி (124 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து முதலி டத்தை தனதாக்கியது. நியூசிலாந்து அணி (106 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய அணி (105 புள்ளி) 4-வது இடத்திலும் இருக் கின்றன.

SCROLL FOR NEXT