கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

முதல் டெஸ்ட்

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டர்பன் நகரில் உள்ள மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதன்படி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

அந்த அணியின் மேட் ரென்ஷா 46 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் (கேப்டன்) 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ யான்சன், முல்டர், ஆன்ட்ரிச் நோர்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT