கோல்டு கோஸ்ட்,
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று கோல்டு கோஸ்டில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் , ஜேக் பிரசர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
ஆனாலும் மார்ஷ் 15 ரன்களும் ஜேக் பிரசர் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 40 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெற்றியைத் தொடர்வதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் நோக்கத்தில் உள்ளது.