கிரிக்கெட்

முதல் டி20 - இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மெல்போர்ன் ,

ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பந்துவீச்சு

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நம்பிக்கையில் இங்கிலாந்து

சமீபத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் டி20 தொடரில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும்.

அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டி20 தொடரையும் கைப்பற்றும் நம்பிக்கையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT